சிவப்புத் துண்டை கைவிட்ட மஹிந்த!

மே தினமான நேற்று விகாரைக்கு வழிபாட்டிற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழமையாக அணியும் சிவப்பு நிற துண்டை அணியாமல் வெறும் கழுத்துடன் வெள்ளை ஆடை அணிந்து சென்றுள்ளார்.

மே தினம் அரசியல்வாதிகளின் தினமாக மாற்றமடைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கவலையுடன் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் மே தினக் கூட்டங்களை நடத்துவதாகவும், தொழிலாளர்கள் தனித் தனியாக மே தினங்களை நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகளை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் அவ்வாறு பாதுகாக்க தவறினால் அரசாங்கத்திற்கு எதிர்காலமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.(ந)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -