பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தாக்குதல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட, நிர்மால் ரஞ்சித் தேவசிறி இன்று காலை சிகிச்சை முடித்து வெளியேறியுள்ளார்.
நேற்று கிருளப்பனையில் மே தின ஊர்வலம் ஒன்று இடம்பெற்ற பகுதியில் வைத்து இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(ந)
