பொத்துவில் கல்விச் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு- இராஜங்க அமைச்சர் ஹசனலி

மீரா.எஸ்.இஸ்ஸடீன்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் சுகாதார, சுதேச இராஜங்க அமைச்சருமான எம்.ரி .ஹசனலி அவர்கள் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியினால் பொதுவில் கல்வி வலயத்தில் மிக நீண்ட காலமாக நிலவிவந்த ஆசிரியர் பற்றாக்குறைக்குத தீர்வு காணப்பட்டுள்ளது .

கடந்த வாரம் பொத்துவில் அல் -முனவ்வரா வித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் என்.கே .கரீம் தலைமையில் நடைபெற்ற நிழல் பிரதி எடுக்கும் இயந்திரத்தைக் கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் கலந்து கொண்டிருந்த போது வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ .எம்.அஸீஸ் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்து அமைச்சர் ஹசனலி அந்த இடத்திலேயே வைத்து தனது கைபேசியூடாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அழ-ஹாபீஸ் நஸீர் அஹமதுடன் தொடர்பு கொண்டு பொத்துவில் கல்விச் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை வழங்குமாறு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து 45 நாற்பத்தைந்து ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு திங்கள் முதல் பணியாற்ற உள்ளனர் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -