'கரைவாகு வடக்கு நகரசபை' கோருதல் தொடர்பான கலந்துரையாடல்!

பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை, பெரிய நீலாவணை பிரதேசங்களை உள்ளடக்கிய 'கரைவாகு வடக்கு நகரசபை' கோருதல் தொடர்பாக ஆராய்ந்த கலந்துரையாடல் இன்று (27-05-2015) இரவு மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. 

மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபை,தக்வா இயக்கங்கள்,பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகியவற்றை உள்ளடக்கிய மருதமுனைக்கான உள்ளுராட்சி அலகொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான செயலணியின் தலைவர் ஓய்வு பெற்ற கல்விப்;பணிப்பாளர் எம்.எச்.காதர் இப்றாஹீம் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த செயலணியின் செயலாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்குவின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்தக்  கலந்துரையாடலில் செயலணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் எம்.ஐ.எம்.வலீத் அமையப்போகும் உள்ளுராட்சி மன்றம் சம்பந்தமாக விளக்கமளித்ததுடன் மன்றத்தின் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பணம் செய்தார்.

அமையப்போகும் உள்ளுராட்சி மன்றம் தொடர்பாக செயலணியின் தலைவர் ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர் எம்.எச்.காதர் இப்றாஹீம்,அனைத்துப் பள்ளிவாசலகள் சம்மேளனத்தின் பதில் தலைவர் அஷ்சேய்க் எப்.எம்.அகமதுல் அன்சார் மௌலானா,கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றகீப்,எம்.எஸ்.உமர் அலி,சட்டத்தரணிகளான எப்.எம்.அமிறுள் அன்சார் மௌலானா,எம்.ஐ.றைசுல் ஹாதி,கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி,மஸ்ஜீதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.எல்.எம்.ஜமால்தீன் ஆகியோர்; அமையப்போகும் உள்ளுராட்சி மன்றம் தொடர்பாக உரையாற்றினார்கள்.

சபையோரின் ஏகமனதான அங்கீகாரத்துடன் 'கரைவாகு வடக்கு நகரசபை'அமைப்பதுபற்றி பிரகடனம் செய்யப்பட்டது.இச்சபையில் மருதமுனையின்  முக்கிய பிரமுகர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.ச






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -