றுமைஸ்-
சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக மிக விரைவில் தரம் உயர்த்தி தருவதாக புத்தசாசன, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் கரு ஜயசூரிய அவர்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தம்மைச் சந்தித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்களிடம் உறுதியளித்தார்.
133 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவையும், 51 கிராம அலுவலர்கள் பிரிவுகளையும் உள்ளடக்கிய சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக தரம் உயர்த்துவதற்கு தேவையான நியாயங்களை கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை, கிராமிய மின்சாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் அமைச்சர் கரு ஜயசூரியவிடம் விளக்கிக் கூறியதோடு, நகர சபையாக தரம் உயர்த்துவதற்கு தேவையான ஆவணங்கள் அடங்கிய மகஜரையும் இதன்போது கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பில் போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் சம்மாந்துறையானது 1947 ஆம் ஆண்டு சம்மாந்துறைப் பட்டின சபையாகவும், 1960 ஆம் ஆண்டு கிராம சபையாகவும், 1988 ஆம் ஆண்டு முதல்
.jpg)
.jpg)
.jpg)