பைரூஸ் ஹாஜியின் வரலாறு படைத்த மேதினமும் திரண்டெழுந்த மக்கள் வெள்ளமும்!

இர்ஸாத் அஹமட்-
நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை 01.05.2015 கொழும்பு கெம்பல் பார்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மேதின ஊர்வல கூட்டத்துக்கு பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வருகை தந்திருந்தமையானது 1976ஆம் ஆண்டுக்கு பிற்பாடு வரலாற்று சாதனை படைத்த மேதின ஊர்வலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் எழுதப்படும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இவ்வூர்வலத்தின் தனது பங்கினையும் மத்திய கொழும்பானது ஐக்கிய தேசியக் கட்சியின் மிக முக்கிய கோட்டையாக கருதப்படும் அதே நேரத்தில் 1976ஆம் ஆண்டு வரலாறு படைத்த மேதின ஊர்வலத்தை நடாத்திய முன்னாள் ஜனாதிபதி ரனசிங்க பிரமாதாசாவின் சொந்த பிறப்பிடம் என்பதனால் இன்னும் இவ்வூர்வலத்தினை சிறப்பாக செய்ய வேண்டும் என மேல் மாகாண சபை உருப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்புக்கான பிரதான அமைப்பாளர் பைரூஸ் ஹாஜியின் ஏற்பாடானது மிக முக்கியமாக அமையப்பெற்றிருந்தது. 

பகல் ஒரு மணிக்கு பைரூஸ் ஹாஜியின் பிரதான அரசியல் காரியாலயம் இருக்கும் புதுக்கடையில் இருந்து பிரமாண்டமான முறையில் ஆரம்பமான மேதின ஊர்வலத்தில் கணக்கில் எடுக்க முடியாதளவிற்கு அதிகமான மக்கள் கலந்து கொண்டு பைரூஸ் ஹாஜியின் கரத்தினை பலப்படுத்தியதோடு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியையும் உறுதி செய்தனர்.

அத்தோடு மத்திய கொழும்பில் இருந்து பைரூஸ் ஹாஜியின் தலைமையில் ஆரம்பமான மேதின ஊர்வலத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் முகமாக கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களான இக்பால் ஹாஜி, விக்னேஸ்வரன், பாஹிம், அப்துர் ரஃமான், முன்னாள் உறுப்பினர் ரிபாய் பதுர்டீன், பிரதேச அமைப்பாளர்கள், பொதுமக்கள் , ஆதரவாளர்கள் என பைரூஸ் ஹாஜிக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தமையினை காணக்கூடியதாக இருந்தது.(ந)  






வீடியோ:


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -