யுத்தக் குற்றங்கள் குறித்த எந்தவொரு முறையான விசாரணைகளுக்கும் இலங்கைக்கு உதவத் தயாராகவுள்ளதாக, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட எந்தவொரு நாட்டிலும் மனித உரிமைகள் குறித்த மிகவும் நேர்த்தியான பதிவுகள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருநாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வௌியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் தற்போது அதிகாரப் பகிர்வு அவசியம் என சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்கா அதற்குத் தேவையான உதவிகளை வழங்கும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பது குறித்த புதிய அரசாங்கத்தின் வௌிப்படைத் தன்மைகளை இதன்போது கெர்ரி பாராட்டினார்.
மேலும் இலங்கையில் தமிழர்களுடன் இணைந்து நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.(ந)
