சரத் என் சில்வாவின் மூளை அச்சாறுவாக மாறியுள்ளது - ராஜித சேனாரத்ன

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் மூளை அச்சாறுவாக மாறியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் இன்றைய அரசாங்கத்தை போன்ற அச்சாறு அரசாங்கத்தை தான் கண்டத்தில்லை என முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா கூறியிருந்தார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சட்டத்திற்கு அமைய தீர்ப்புகளை வழங்காது தான் விரும்பியவாறு வழக்கு தீர்ப்புகளை வழங்கிய சரத் என் சில்வா கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசாங்கம் அச்சாறு அல்ல சரத் என் சில்வாவே அச்சாறு. அவரது மூளை அச்சாறு.

அவருக்கு ஹெல்பின் அம்பாந்தோட்டை தீர்ப்பு தவறானது என ஒரு முறை தோன்றும். அது தான் செய்த தவறு என்று அவரே கூறுகிறார். அவர் வழக்கு தீர்ப்பை வழங்கவில்லை அவரது தீர்ப்பையே வழங்கியுள்ளார்.

தற்போது வயதாகிவிட்டது அவரது நிலைமை மேலும் மோசமடைந்திருக்கலாம். அதனால்தான் இப்படியான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -