சுலைமான் றாபி-
நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு 07பேர் கொண்ட 06 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (01.05.2015) வெள்ளிக்கிழமை. நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த இறுதிப் போட்டிக்கு நிந்தவூர் அட்வன்சர் மற்றும் லகான் ஆகிய இரண்டு அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லகான் அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது. முதலில் துருப்பெடுத்தாடிய நிந்தவூர் அட்வன்சர் அணி 05 ஒவர்கள் நிறைவடைவில் விக்கெட் இழப்பின்றி 78 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அதிரடியாக ஆடிய நிக்சி அஹமட் ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும், றிஸ்னி 11 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் லகான் அணி சார்பாக அப்சல் 16 ஓட்டங்களையும், சமீர் 18
ஓட்டங்களையும் வழங்கினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லகான் அணி 05 ஒவர்கள் நிறைவடைவில் 03 விக்கெட் இழப்பிற்கு 60 ஓட்டங்களைப்பெற்று மேலதிக 18 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக் கொண்டனர்.
இந்த அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சமீர் 26 ஓட்டங்களையும், அப்சல் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அட்வன்சர் அணி சார்பாக சபீக் 05 ஓட்டங்களுக்கு 02 விக்கட்டுக்களையும், மலிக் 07 ஓட்டங்களுக்கு 01 விக்கட்டினையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
இறுதியில் இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு 10,000 ரூபா பணப்பரிசும், வெற்றிக்கோப்பையும், தோல்வியுற்ற அணிக்கு 5,000 ரூபா பணப்பரிசும், வெற்றிக்கோப்பையும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எஸ் எல். தாஜுதீன், லகான் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எம்.எம். சாஹிர் அஹமட் உள்ளிட்ட நிந்தவூரில் காணப்படும் விளையாட்டுக்கழகங்களின் தலைவர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகத்தினரிற்கு விளையாட்டு உபகரணமும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.(ந)
.jpg)
.jpg)
.jpg)