சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு விழாவின் இறுதி நாள் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும்!

ஹாசிப் யாஸீன்-
சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு விழாவின் இறுதி நாள் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்று (01) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பீ.எம்.றஜாய் தலைமையில் இடம்பெற்ற இவ் இறுதி நாள் போட்டி நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம். அமீர் அலி, ஓய்வு பெற்ற மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.நபார், தென்கிழக்கு பல்கலைக்கழக உடற்பயிற்சி போதனாசிரியர் ஐ.எம்.கடாபி, அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றசீன் உள்ளிட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு விழாவில் 9 விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றின. இதில் ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் 44 புள்ளிகளைப் பெற்று சாய்ந்தமருது பிரதேச செயலக 2015ம் ஆண்டுக்கான சம்பியனானது. பிளைங் கோர்ஸ் விளையாட்டுக் கழகம் 34 புள்ளிகளைப் பெற்று 2ம் இடத்தையும் பிறேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் 15 புள்ளிகளைப் பெற்று 3ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இவ் விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற கழகங்கள் மற்றும் வீரர்களுக்காக கிண்ணங்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.(ந)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -