மேதினியில் மேதினம்!

கலைமகன் பைரூஸ்-
சிங்க ஏறுகள் எலிகளை நசுக்கி
சிம்மாசனத்தில் அமர்ந்து
பூனைகளின் கால்களால் நசுங்குவதை
வேடிக்கை பார்க்கின்றன இன்றும்...

முற்று முழுதாய் நசுக்குவதையே
மேதினியில் பெரும்பேறாய்க் கொண்டு
மேதினம் வேறு கொண்டவதில்
மும்முரமாய் நிற்பவனும் ஏறுகள்தாம்!

பாரையே வடிவமைக்கும் உழைப்பாளி
பாரில் திரண்டெழுந்தால் பாரழியும்
பாராளுமன்றமும் நிலத்திற்சாயும் என்பது
பாராளும் வர்க்கத்திற்கு தெரியாமலில்லை...

இம்மியும் இடைவெளிவிடாது அவனுதிரம்
இத்தரைமீது வீழ்வதையே விரும்பும்
இச்சிங்கவேறுகள் எலிகள் வலிபற்றி
இங்கறிந்தும் இன்றும் மேதினம்மட்டுமே!

கைகட்டி வாய்புதைத்த காலம்போதும்
கரமுயர்த்தி உரிமைக் குரலெழுப்பி
கையாலாகாத வர்க்கத்திற்கு பாடம்சொல்லி
கைதிநிலையறுத்து பணிபுரிவோம் தரமாய்!

மேதினிமேன்மையுறப் பாடும்
மேம்பட்ட பாடுபடுவார் அனைவருக்கும்
மேலுயர்ந்த வாழ்த்துக்கள் நலம்வாழ
மேலவ னல்லாஹ் அருள் புரிவானாக!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -