3500 மடிக் கணனிகளை இளைஞர்களுக்கு வழங்கி அமெரிக்கா ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த மடிக் கணனிகளை அமெரிக்கத் தூதரகம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக கணனிப் பயிற்சி நெறியும் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இணைய தளங்களை கட்டுப்படுத்தும் பிரதான சக்தியாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட தரப்பினர் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இணைய தளங்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இணைய தளங்களின் ஒத்துழைப்பு தமக்கு கிடைக்கவில்லை எனவும், இணையத்தில் விடுக்கப்பட்ட சவால்களை முறியடிக்க திறமையான இணையக் குழுவொன்று தம்மிடமிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.(sa)
