அரசியலிலிருந்து விலகப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதல்வர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை தெரிவித்துள்ளார்.
தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் குடும்பத்தாரும் 18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மை என அமைச்சர் மங்கள நிரூபித்தால் தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தினர் சொத்துக்களை குவித்துள்ளதாக மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஸவும் இன்று காலை தனது பேஸ்புகவலைத்தளம் ஊடாக தெரிவித்துள்ளார்கள்.(ச)