எமது புதிய அரசியல் கட்சி அடுத்த வாரம் உதயம் - சோமவங்ச அமரசிங்க

மது புதிய அரசியல் கட்சியை அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகியுள்ள அதன் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்பொருட்டு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாம் ஆரம்பிக்கவுள்ள அரசியல் கட்சியின் பெயர், நிறம் மற்றும் சின்னம் ஆகிய விடயங்கள் கட்சியின் மாநாட்டிலேயே தீர்மானிக்கப்படும் என்றும் சோமவங்ச அமரசிங்க சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் தம்முடன் கலந்துரையாடுவதற்கு நிபந்தனையற்ற சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் முன்னணியின் முன்னாள் தலைவர் கூறினார்.

தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்ட பொறுப்புள்ளவர்கள் ஏற்கனவே தம்முடன் கைகோர்த்துள்ளதாகக் கூறியுள்ள சோமவங்ச அமரசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் அங்கத்தவர்கள் எவருக்கும் தாம் ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமையின் கீழ், எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தாம் தொடர்புடவில்லை என்னும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -