ஏஎம் றிகாஸ்-
மட்டக்களப்பு – ஏறாவூர் வந்தாறுமூலை பிரதேசத்தில் உழவு இயந்திரமொன்றின் இழுவை பெட்டி முறிந்து விழுந்ததனால் உதவியாளர் உயிரிழந்துள்ளார்.
வந்தாறுமூலை உப்போடை வீதியில் இடம் பெற்ற இச்சம்பவத்தில் 24 வயதுடைய இளையதம்பி திலகராஜ் என்பவரே பலியானவரென ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இழுவைப் பெட்டியிலிருந்த மணலைக் கொட்டுவதற்காக உயர்த்தப்பட்ட இழுவைப் பெட்டியை மீண்டும் சீர் செய்வதற்காக அந்த உழவு இயந்திரத்தின் உதவியாளர் கீழே சென்ற போது பெட்டியின் பம்பி முறிந்து விழுந்த வேலையே உதவியாளர் சிக்கியுள்ளாரென ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

