இந்தியாவின் பாரிய வர்த்தக, கைத்தொழில் நிறுவனமான டாட்டா சன்ஸ் ஹக்கீமுடன் நீண்ட நேர கலந்துரையாடல்!

ற்பொழுது இலங்கை வந்துள்ள இந்தியாவின் பாரிய வர்த்தக, கைத்தொழில் நிறுவனமான டாட்டா சன்ஸ் குழுமத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகளை செவ்வாய்கிழமை (26) முற்பகல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

நகர அபிவிருத்தி உட்பட பல்வேறு பயனள்ள துறைகளில் இலங்கையில் கூடுதலான முதலீடுகளை மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களை கண்டறிவதே டாட்டா குழுமத்தின் நிறைவேற்று சபையின் தலைவரும், சர்வதேச வர்த்தக அபிவிருத்தி மற்றும் பொது விவகார தலைவருமான மது கண்ணன் தலைமையில் இலங்கை வந்துள்ள பிரஸ்தாபக் குழுவின் நோக்கமாகும்.

அமைச்சின் மேலதிகச் செயலாளர் பீ.சுரேஷ், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் நயன மாவில்மட, நிறைவேற்றுப் பணிப்பாளர் கிஷான் கருணரத்ன ஆகியோர் உட்பட உயரதிகாரிகளும் கலந்துரையாடலில் பங்கு பற்றினர்.(ந)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -