அஷரப் .ஏ. சமத்-
கல்லொழுவை அல் அமீன் மாகா வித்தியாலயத்தின் அதிபர் நேற்று நடைபெற்ற விழாவின் கூறிய தகவல் -
இந்தப் பாடசாலைக்கு நான் அதிபரக வந்து 3 மாதங்கள் ஆகின்றன. நேற்று முன்தினம் பாடசாலை வகுப்பரையில் மாணவர்கள் தூள் (போதைப்பொருள்) பாவிப்பதனை அவதானிக்க முடிந்தது. ஆகவே இவ் விழாவுக்கு வருகைதந்த மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் அவர்களே மேல் மாகாண முதலமைச்சரிடம் ஊடாக இவ்விடயத்தை கவனத்திற்கு கொண்டு வாருங்கள்.
இந்தப் பாடசாலையின் சகல வகுப்பறைகளையும் ஏனைய பிரதேசங்களையும் அதிபர் அறையில் இருந்து கொண்டு அவதானிக்கக் கூடியவாறு ஒரு சீ.சீ.டி கமராக்கள் பொருத்தி தாருங்கள் என இக் கல்லூரியின் அதிபர் ஹமீல் வேண்டுகோள் விடுத்தார்.
கம்பஹா மாவட்ட இஸ்லாமிய பாடசாலைகளின் சங்கத்தினால் மினுவங்கொட கல்லொழுவ அல் அமீன் மாகாவித்தியாலயத்தில் 5ஆம் ஆண்டு மற்றும் க.பொ.த.சாதாரண தரம் சித்தியெய்திய மாணவர்களுக்கு பரிசிதலும் சான்றிதழும் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் இக் கல்லூரியின் அதிபர் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மேல்மாகண சபை உறுப்பினர் எம். பாயிஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கம்பஹா மாவட்ட இஸ்லாமிய பாடசலைகளின் செயலாளர் டொக்டர் முபாறக், சம்மன்கொட்ட பள்ளிவசால் மௌலவி எம். பர்ஹான், ஷேக் அக்ரம் சிரேஸ்ட ஊடகவியாலாளர் சித்தீக் ஹனிபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அதிபர்;
நமது முஸ்லீம் மாணவர்கள் மீது பெற்றோர்கள் ஆசிரியர்கள், புத்திஜீவிகள் விழிப்பாக இருத்தல் வேண்டும்.
அவர்கள் வகுப்புக்குள் வரும்போது என்ன போதை, டொபியை, அல்லது மசக்கும் பொருட்களை பாவித்துக் கொண்டு வகுப்பறைக்குள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அந்த வகுப்பில் ஆசிரியர் கற்பித்திருப்பது கூட விளங்காமல் போதையில் இருக்கின்றதை அவாதானிக்க முடிந்தது. கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகளில் இவ்வாறாக சீ.சீ.டி கமராக்கள் பொறுத்தபட்பட்டுள்ளது. குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் பாடசாலைகள் இவ்வாறு பல பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பாடசாலையில் கட்டடிடங்களைகூட வர்ணம் பூசுவதற்கு வழியில்லாமல் உள்ளோம். இங்கு வருகைதந்த டொக்டர் முபாரக் அவர்கள் ஒரு அனுசரணையாளர் ஒருவரை அனுகி இதனை செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள்.
பெற்றோர்கள், பழைய மாணவர்கள் இக் கல்லூரியின் வளர்ச்சி அபிவிருத்தியில் தொடர்புடையவர்களாக இருத்தல் வேண்டும். ஆனால் முஸ்லீம் பாடசாலைகளில் அவ்வாறு பெற்றோர்கள் அக்கரை செலுத்துவதில்லை.
இந்த நிகழ்வுக்கு இந்த பாடசாலையின் மாணவர்களது பெற்றோர்கள் நிறைந்து காணப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால் தமது பாடசாலையின் ஒரு நிகழ்வுக்கு பெற்றோர்கள் வராமலிருப்பது கவலைக்குறிய விடயம். இதனால் அவர்களது பிள்ளைகள் கல்வியில் எவ்வாறு அக்கரை செலுத்துகின்றனர், என்பதனை அவதானிக்க முடியும்.
பெண்பிள்ளைகள் 'பேஸ் கவர் அணிந்து வீட்டுக்குள் இருந்தாலும் கூட இந்த உலகத்தில் உள்ள அனைத்து கெட்ட விடயங்களையும் தொடக்கூடியவாறு அவர்களது கைகளில் ஒரு 'செல் போன்' மட்டும் இருந்தால் போதும். பெற்றோர்கள் தமது பெண் குழந்தைகளையும் கட்டாயம் கன்காணித்தல் வேண்டும். தற்பொழுது பேஸ் புக், போன்ற சோசியல் மீடியாக்கள் பரந்துள்ள நவீன உலகத்தில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேறி உள்ளது. பிள்ளைகளுக்கு கணனி, இன்டெனட் பாவிப்பதற்கு வீட்டுக்குள் சகலரும் அறியக் கூடியவகையில் பொதுவான ஒரு இடத்தில் வையுங்கள். அவர்களது தனியான அறையில் இந்த வசதிகளை செய்து கொடுக்காதீர்கள்.
இன்று உலகெங்கும் யாழ் புங்குடுதீவு வித்தியாவை பற்றி அதிகம் பேசுகின்றோம். ஆனால் நமது பெண்பிள்ளைகள் பற்றி விழிப்பாக இருக்க வேண்டும். இன்னொரு மாணவிக்கு இவ்வாறு நடக்க முன்னர் நமது பிள்ளைகளுடன் கண்னும் கருத்துமாக இருத்தல் வேண்டும் என அதிபர் உரையாற்றினார்.(ந)










