பேரீத்தம் பழங்களை கையளிக்கும் நிகழ்வு!

ஏ.எஸ்.எம்.ஜாவித்

புனித நோன்பை முன்னிட்டு இலங்கையில் உள்ள நோன்பாளிகளுக்கு வழங்கவென ஐக்கிய அரபு இராட்சியத்தின் செம்பிறைச் சங்கம் சுமார் 15 மெற்றிக் தொன் பேரீத்தம் பழங்களை இலங்கையில் உள்ள ஐக்கிய இராச்சியத் தூதுவராலயத்தினூடாக வழங்கியுள்ளது.

மேற்படிப் பேரீத்தம் பழங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று (19) ஐக்கிய இராச்சியத் இலங்கைக்கான தூதுவராலயத்தில் வைத்து அதன் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமீட் ஏ.கே. அல்- முல்லா முஸ்லிம் சமய மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீமிடம் கையளித்தார். 

இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் மற்றும் அமைச்சரின் பிரத்தியோகச் செயலாளர் முஹமட் பாஹிம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -