முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பொதுமக்கள் பிரதமர் பதவியில் அமர்த்துவார்கள் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். குருநாகலில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான கூட்டத்தின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர், மைத்திரிபால சிறிசேனவுக்கு 6.2 மில்லியன் பேர் வாக்களித்தனர். மஹிந்த ராஜபக்சவுக்கு 5.8 மில்லியன் மக்கள் வாக்களித்தனர்.
எனவே ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை ஆதரிப்பதா? அல்லது மஹிந்தவை ஆதரிப்பதா? என்று சிறிசேன விரைவில் தீர்மானிக்கவேண்டும் என்றும் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த புதன்கிழமை நடந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் நடந்த சந்திப்பின் போது தன்னை பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.sa
