நூர்-
நுரைசோலை வீட்டுத்திட்டத்தை உரிய மக்களிடம் கையளிக்கும் தைரியம் அமைச்சர் ஹக்கீமுக்கு இல்லை என்கிறார் மக்கள் காங்கிரசின் சர்வதேச பணிப்பாளர் அன்வர் முஸ்தபா.
ஊரான் பிள்ளைக்கு பெயர் வைத்து திரியும் தலைமைகளால் மக்கள் பிரச்சினைகளை அடையாளம் காண முடியாது எனவும் சீறினார்.
அண்மையில் இறக்காமத்தில் இடம்பெற்ற தையல் பயிற்சி நிலைய திறப்பு விழாவை ஒட்டி இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது இவ்வாறு கூரினார்.
கைத்தொழில் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவருமான ரிசாத் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் கட்சியின் செயலாளர் Y L சாஹுல் ஹமீட், சமுர்த்தி பிரதி அமைச்சர் MSS அமீர் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் M .சுபைர், கட்சியின் சர்வதேச விவகார பணிப்பாளர் அன்வர் முஸ்தபா, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கிய பிரமுகர்களும், ஊர் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு திறந்து வைக்கப்பட்ட தையல் பயிற்சி நிலைய திறப்பு விழாவை அடுத்து இடம்பெற்ற பொதுக்கூட்டதில் உரையாற்றிய அன்வர் முஸ்தபா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது;
மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்றவர்களும் மாகாண சபை சென்றவர்களும் முக்கிய தருணங்களில் மௌன விரதம் இருப்பது இப்போது வாடிக்கையாகி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
சவூதி அரசினால் கட்டிகொடுக்கப்பட்ட வீட்டு திட்டத்தை உரிய மக்களிடம் கையளிக்க முடியாத வங்கறோத்து அரசியல் செய்யும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரால் உங்கள் கட்சியை நம்பி வாக்களித்த இந்த மக்களின் தேவைகளை புரிந்து செயலாற்ற முடியாமல் போனது ஏன் என கேள்வி எழுப்ப விழைகிறேன் என கேள்வி எழுப்பிய இவர் இந்த இறக்காம பிரதேச சபை பிரிப்புக்கு தானும் பங்காளியாக இருந்ததை சுற்றிக்காட்டி ஊரான் கட்டிய கட்டிடங்களை தான் கட்டியதாக திறப்பு விழா செய்யாதீர்கள் என கேட்டுகொண்டார்.
இந் நிகழ்வில் தொடர்ந்தும் பிரதியமைச்சர், மக்கள் காங்கிரஸ் செயலாளர், மா.சபை உறுப்பினர் என பலரும் உரையாற்றினர்.(ந)



