எம்.எம்.ஜபீர்-
பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள திவிநெகும பெறும் வறிய குடும்பங்களிலுள்ள சாதாரண தரத்தில் சித்தியடைந்து உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு திவிநெகும சமூக பாதுகாப்பு நிதியத்தினால் சிப்தொர புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை பொத்துவில் பிரதேச செயலக பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பொத்துவில் பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸர்ரத், பொத்துவில் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஏ.அப்துல் அஸீஸ், திவிநெகும சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.எம்.எப்.நஸ்ரீன். திவிநெகும சமுதாய அடிப்படை வங்கியின் உதவி முகாமையாளர் ஏ.எல்.றபீக், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், திவிநெகும முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது திவிநெகும பெறும் வறிய குடும்பங்களிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு சிப்தொர புலமைப் பரிசில் நிதி வழங்கி வைக்கப்பட்டது.ந












