ஓட்டமாவடியில் புதிய ஜும்மா பள்ளிவாயல் தேவையா? முரண்பாடுகளுக்கு என்ன காரணம்?

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
ல்குடா பிரதேசத்தில் சமூக சேவைகளை முற்றிலும் இலவசமான முறையில் முன்னின்று செய்து வருக்கின்ற அல்-கிம்மா நிறுவனமானது சவூதி அராபியா நாட்டின் தனவந்தர்களினதும், கொடையாளிகளினதும் உதவிகளுடன் ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில் அழகிய தோற்றத்துடன் மூன்று மாடிகளைக் கொண்ட பள்ளிவாயல் ஒன்றினை நிர்மாணிதுள்ளது. அந்த வகையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அப்புதிய பள்ளிவாயலில் ஜும்மா தொழுகையினை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் அல்-கிம்மா நிறுவனம் முன்னெடுத்திருந்தது.

மறுபக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அலி-கிம்மா நிறுவனத்தின் புதிய பள்ளிவாயலில் இருந்து சுமார் 500மீற்றர் தூரத்தில் ஓட்டமாவடி மொஹைதீன் ஜுமா பள்ளிவாயல் இருக்கின்றது. அந்த வகையிலே ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயலானது தாராளமாக ஜும்மா தொழுகைக்கு போதுமானதாக உள்ளதாகவும், புதிதாக ஜும்மா தொழுகை நடாத்துவதற்க்கு எந்த தேவைப்பாடும் ஓட்டமாவடி எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் இல்லை எனவும் ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலிம் நம்பிக்கையாளர் சபையினர் தெரிவித்து வருக்கின்றனர்.

ஆனால் பிரயாணிகளினதும், வியாபரிகளினதும், மற்றும் சுன்னா அடிப்படையில் நேரகாலத்தோடு ஜும்மா தொழுகையினை நிறைவுசெய்வதற்காக வேண்டியும் நாங்கள் புதிதாக கட்டி முடித்துள்ள பள்ளிவாயலில் ஜும்மா தொழுகை நடாத்துவதற்கு அனுமதி கோரியவர்களாக அல்-கிம்மா நிறுவனத்தினர் கடந்த 23.04.2015 வியாழக் கிழமை ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த வேலையில் கருத்து முரண்பாடுகள் காரணமாக வாய்த்தர்கங்களில் ஈடுபட்டிருந்தனர். 

இதன் போது ஓட்டமவாடி ஜும்மா பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையும், அதன் செயலாளர் இஸ்மாயில் ஆசிரியரும் அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்து சமூதாயத்தில் முக்கிய பணியாற்றிவரும் அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளரினதும், சமூகமளித்திருந்த ஊழியர்களினதும் மனங்களை புன்படுத்தியதாக சமூக வலைத்தளமான யூ டியூப்பில் காணொளி செய்தியக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இதன் உண்மை நிலையினை அறிந்து கொள்வதற்காக சம்பந்தப்பட்ட ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் இஸ்மாயில் ஆசிரியரையும், அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாரூன் மெளவியையும் நேரடியாக சந்தித்து அவர்களிடம் தொடுத்த கேள்விகளுக்கான பதில்களை எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. றி

வீடியோ - இஸ்மாயில் ஆசிரியரினதும், ஹாரூன் மெளவியினதும் 
விளக்கங்கள்:- 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -