பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் சிந்தனையின் அடிப்படையில் இளைஞர் கழக அங்கத்தவர்களின் அபிவிருத்திக்காக பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணம் பகிர்ந்தளித்தல் மற்றும் இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக நாட்டு மக்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டம் இன்று 02.05.2015ம் திகதி நாடு தழுவிய ரீதியில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சகல பாகங்களிலும் 74 வேலைத்திட்டங்கள் அன்றைய தினம் நடைபெறவுள்ளது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வேலைத்திட்டங்களை நடாத்த சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று மற்றும் ஏறாவூர்ப்பற்று ஆகிய 06 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக வாழைச்சேனை ஏஊ மைதானத்திலும், ஏறாவூர் நகர், காத்தான்குடி, மண்முனை வடக்கு, மண்முனை மேற்கு, மண்முனைப்பற்று ஆகிய 05 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்திலும் மண்முனை தென்மேற்கு, மண்முனை தென் எருவில் பற்று, ஆகிய 03 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக களுதாவளை பொது மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதேச அரசியல் வாதிகள், திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள், போன்றோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். என மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர்; சேவைகள் மன்;றத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என். நைறூஸ் தெரிவித்தாக ஏறாவூர் நகர் இளைஞர் சேவை அதிகாரி பி.எம். றியாத் தெரிவித்தார்.
