முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் இடத்தை நிரப்ப முஜிபுர் ரஹ்­மான மிகவும் பொருத்­த­மா­னவர்!

ன, மத பேதங்­க­ளுக்கு அப்பால் சேவை­யாற்றி கொழும்பு வாழ் மக்­களின் மனங்­களில் குடி­கொண்­டுள்ள முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் மறை­விற்­குப்­பின்னர் அந்த இடம்பெறும் இடை­வெ­ளி­யா­கவே இருக்­கின்­றது. 

அந்த இடத்தை நிரப்­பக்­கூ­டிய தலைவர் ஒருவர் எமக்கு தேவை என தெரி­வித்த கொழும்பு மாந­கர சபை உறுப்­பி­னரும் கிராண்பாஸ் வடக்கு ஐக்­கிய தேசிய கட்சி அமைப்­பாள­ரு­மான ஆரி­ய­ரட்ன சந்­தி­யாகோ;  இன, மத பேதங்­க­ளுக்­கப்­பால் மக்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல்­கொ­டுத்து வரும் மேல்­மா­காண சபை உறுப்­பி­னரும் மத்­திய கொழும்பு பிர­தான அமைப்­பா­ள­ரு­மான முஜிபுர் ரஹ்­மான அந்த இடத்தை நிரப்ப மிகவும் பொருத்­த­மா­னவர் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

கடந்த சனிக்­கி­ழமை கிராண்பாஸ் சென் ஜோசப் வீதிஇ 3 ஆம் ஒழுங்­கையில் இடம்­பெற்ற ஆத­ர­வா­ளர்கள் எழுச்சிக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்;

மத்­திய கொழும்பில் நாம் அர­சியல் அநா­தை­க­ளாக இருக்­கின்றோம். எமது தொகு­தி தொடர்ச்­சி­யாக ஐக்­கிய தேசிய கட்சி ஆத­ர­வுத்­த­ள­மாக இருந்­தாலும் எமக்­கா­ன­தொரு பாரா­ளு­மன்ற பிர­தி­நிதி இல்­லாமல் இருக்­கின்றோம். 

1993 ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி ஆர் பிரே­ம­தா­சவின் மறை­விற்­குப்­பின்னர் மத்­திய கொழும்பு முழு­மை­யாக புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக 1994 ஆம் ஆண்­டுக்­குப்­பின்னர் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் ஆட்­சி­யொன்று நிலை­யாக உரு­வா­கா­மை­யினால் நாம் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்ளோம். அத்­துடன் 2010 ஆண்டு தேர்­த­லின்­போது மத்­திய கொழும்­பி­லி­ருந்து ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் போட்­டி­யிட்­ட­வர்கள் தோல்­வி­ய­டைந்­தனர். இதனால் எமது பிர­தி­நி­தித்­து­வமும் இல்­லா­மல்­போ­யுள்­ளது. 

இன்று எமது வாக்­குகள் பணத்­தாலும் சன்­மா­னங்­க­ளி­னாலும் வாங்­கப்­ப­டு­கின்­றது. பணத்தைக் கொடுத்து வாக்­கு­களை பெற்­ற­பின்னர் அர­சியல் வாதிகள் எம்மை சந்­திக்க வரு­வதே இல்லை. இப்­படி நாம் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­டி­ருக்­கிறோம். இந்­நி­லையில் ஆர். பிரே­ம­தா­ச­விற்கு பின்னர் மத்­திய கொழும்பில் ஒரு தலை­வரை உரு­வாக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

இதற்­காக நாம் இன மத பேத­மின்றி செய­லாற்றக் கூடிய மத்­திய கொழும்பின் பிர­தான அமைப்­பா­ளரும் மேல்­மா­காண சபை உறுப்­பி­ன­ரு­மான முஜிபுர் ரஹ்­மானை அடுத்த பாரா­ளு­மன்­றுக்கு தெரிவு செய்ய வேண்டும். அவர் எமது சமூ­கத்தின் உரி­மை­க­ளுக்­காக போராடக் கூடி­யவர். 

தேர்தல் காலம் நெருங்­கு­வதால் பெரசூட் மூலம் சில அர­சியல் வாதிகள் வந்து வீடு தரு­வ­தாக சொல்­வார்கள். அந்த போலி வாக்­கு­று­தி­களை நம்ப வேண்டாம். அடுத்து வரும் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆட்­சியில் மத்திய கொழும்பில் எந்தவொரு அபிவிருத்தி இடம்பெற வேண்டுமானாலும் பிரதான அமைப்பாளர் முஜிபுர் ரஹமானின் மூலமாகவே இடம்பெறும். எனவே அவரை அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிசெய்ய நாம் முயற்சிப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -