புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்-
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையம், அதன் அங்கத்தவர்களான சமாதான நீதிவான்களின் விபரங்களடங்கிய தொகுப்பு நூல் ஒன்றினை 'நீதியின் நிரல்' எனும் தலைப்பில் மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரி மண்டபத்தில் அண்மையில் வெளியிட்டு வைத்தது.
இம்மையத்தின் பொருளாளரும், ஸ்தாபகத் தலைவருமான ஜனாப் எம்.எம். அகமது லெப்பை (பாவலர் சாந்தி முகைதீன்) தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் சுவாமி சதுர்புஜானந்தா, மட்டு. மறை மாவட்ட ஆயர் பேரருட் தந்தை ஜோஸப் பொன்னையா, மௌலவி எம்.பி.எம். பாஹிம் (பலாஹி) ஆகிய மும்மதங்களின் குருமார்களுடன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எம்.ஸ். சார்ள்ஸ் மற்றும் மைய அங்கத்தவர்களான சமாதான நீதவான்களும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 190 சமாதான நீதிவான்களின் விபரங்களடங்கிய இந்நூல் இந்நிகழ்வின்போது மையத்தின் அங்கத்தவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.ந





