எம்.ஜே.எம்.சஜீத்-
'மாமரத்தை கத்தரித்தலும் பயிற்று வித்தலும்' என்ற தொனிப்பொருளில் செயற்றிட்டமொன்று அம்பாறை மாவட்ட மாகாண விவசாய திணைக்களத்தினால் அட்டாளைச்சேனை விவசாய போதனை ஆசிரியர் எஸ்.எல்.எம். அஸ்கரின் தலைமையில் அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்லூரியின் பீடாதிபதி அல்-ஹாஜ் எம்.ஐ.எம். நவாஸ் கலந்து கொண்டு உரையாற்றுகையில்;
அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரி வளாகத்தில் உள்ள அனைத்து மாமரங்களையும் செழிப்பான முறையிலும் அதிகபடியான மாங்காய்கள் விளைச்சல் அடைவதற்கான அனைத்து வேலை திட்டங்களையும் செய்தமைக்கு முதற்கன் விவசாய பணிப்பாளர் காரியாலயத்துக்கு நன்றி தெரிவித்ததுடன் எமது கல்வி நிறுவனத்துக்கும் விவசாய திணைக்களத்துக்கும் உள்ள உறவு எதிர்காலத்தில் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுடன் எமது கல்விக்கல்லூரி வளாகம் அதனுடைய சுற்றுப்புறச் சூழல் எதிர்காலத்தில் சுத்தமாக இருப்பதற்கு நாம் அனைவரும் உதவ வேண்டும் என குறிப்பிட்டார்.
இதன் போது கல்லூரி வளாகத்தில் உள்ள மா மரங்கள் அனைத்தும் செய்முறைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் கல்லூரியின் பதிவாளர் எஸ்.எம்.பஸிர், விவசாய திணைக்களத்தின் கண்கானிப்பு உத்தியோகத்தர் டி. வடிவலகன், நிந்தவூர் வலயத்தின் விவசாய நிறுவாக உத்தியோகத்தர் ஏ. ரவிந்திரன், விவசாய திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட ஆசிரிய பயிலுனர்களும் கலந்து கொண்டனர்.







