நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், தனது பிறந்த நாள் அன்று தனது தாய் கண்மணிக்காக கோயில் கட்ட இருப்பதாக அறிவித்தார். இந்த கோயில் கட்டுவதற்காக அடித்தளம் அமைக்கும் பணியை சிறந்த நாளில் தொடங்க காத்திருந்த லாரன்ஸ், தற்போது அன்னையர் தினமான வரும் மே 10ம் தேதி அடித்தளம் அமைக்கிறார்.
லாரன்ஸ் ஏற்கனவே கட்டியுள்ள அம்பத்தூர் ராகவேந்திரா கோவில் அருகிலேயே தாய்க்கு கோயில் கட்ட அடித்தளம் அமைக்கிறார். இந்நிகழ்ச்சியை லாரன்ஸ் தனது அன்னையின் முன்னிலையில் நடத்தவுள்ளார். இவரது தாயாரின் உருவ சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் வடிவமைப்பதாக கூறப்படுகிறது.
உலகிலேயே வாழும் தாய்க்கு கோயில் கட்டப்படுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.ச
