வில்பத்தை அண்டிவாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு நீதி வேண்டி சாய்ந்தமருதில் கவனஈர்ப்புப் போராட்டம்!

எம்.வை.அமீர் -
பாரம்பரியமாக வில்பத்தை அண்டிவாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு நீதி வேண்டி சாய்ந்தமருதில் கவனஈர்ப்புப் போராட்டம்-எம்.வை.அமீர் -வில்பத்து காட்டுப்பகுதியை அண்டிவாழ்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றக் கோரியும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியூதீன் அவர்களது செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்தும் 2015-05-29ல் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்பாக கவனஈர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய பிரதி அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களது தலைமையில் இடம்பெற்ற மேற்படி கவனஈர்ப்புப் போராட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருதூர் அன்சார் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் நுகர்வோர் அதிகாரசபையின் தலைவருமான துல்சான் உட்பட கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், பலநூறு வருடங்களாக வில்பத்து காட்டுப்பகுதியை அண்டிவாழ்ந்த முஸ்லிம் மக்கள் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையின் காரணமாக வெளியேற்றப்பட்டனர்.

நாட்டில் அமைதியான சூழ்நிலை மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் அவர்கள் காலம்காலமாக வாழ்ந்த இடங்களுக்கு குடியேற ஆரம்பித்துள்ள நிலையில் இனவாதிகளால் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியேறுவதற்கு தடைகள் விதிக்கப்பட்டுவருகின்றன.

குறித்த மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியூதீன் அவர்கள் முழுமூச்சாக இயங்கிவரும் இவ்வேளையில் அமைச்சர் றிஷாத் பதியூதீன் அவர்களுக்கு எதிராக இனவாதிகளால் தடைகள் விதிக்கப்படுவதாகவும் இவ்வாறான இனவாதிகளின் செயற்பாடுகளை கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

வில்பத்து காட்டுப்பகுதியை அண்டிவாழ்ந்த முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் அமைச்சர் றிஷாத் பதியூதீன் அவர்களைத்தவிர ஏனைய முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்களது மௌனங்களைக் கலைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இங்கு வில்பத்து முஸ்லிம்களுக்கு ஆதரவான பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு மக்கள் அமைதியாக கவனஈர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.ச

அகமட் எஸ். முகைடீன்-

வில்பத்து முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தினை தடுக்க முயலும் இனவாத சக்திகளுக்கு எதிரான கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (29/05/2015) சாய்ந்தமருது ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் முன்பாக ஜூம்ஆ தெழுகையினைத் தொடர்ந்து நடைபெற்றது.

முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நுகர்வோர் அதிகார  சபையின் பணிப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான துல்கர் நயீம், மற்றும் சமூகப்பற்றுள்ள பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் “மீள் குடியேற்றத்தை அரசியல் வியாபாரம் செய்ய வேண்டாமே உண்மையே உரைப்போமே”, “தலைமை என்பது மக்களுக்காக”, “அரசே வில்பத்துவின் தவறான ஜி.பி.எஸ் வரைபை ரத்துச் செய்”, “வட புல மக்களின் பிரச்சினை எமது பிரச்சினை”, “வட புல முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை இனவாதமாக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்பட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.   

எஸ்.அஷ்ரப்கான்-

வடபுல முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற அநீதிகளைக் கண்டித்தும் வடபுல முஸ்லீம்களின்மீள்குடியேற்றத்தில் காணப்பட்டுவரும் பாராபட்சங்ககை; கண்டித்தும் வில்பத்து பிரதேசத்திலுள்ளமுஸ்லீம்களின் காணிகளுக்கு எதிராக மேற் கொள்ளப்படும் சதி முயற்சிகளைக் கண்டித்தும்சாய்ந்தமருதில் பாரிய எதிர்ப்பு ஆர்பாட்டம் இன்று (29) ஜூம்மாத் தொழுகையின் பின்னர் நடைபெற்றது. 

கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிபின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் பல நூற்றுக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -