சம்மாந்துறையில் 'சிப்தொற' புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு!

அபூ-இன்ஷாப்-

றுமை என்பது கல்விக்கு ஒருபோதும் தடையாக அமைந்து விடக் கூடாது என்பதற்காக அரசாங்கம் வருடாந்தம் கூடுதலான பணங்களை கல்விக்காக செலவு செய்து வருகின்றது.

எந்தவொருநாட்டிலுமில்லாதவாறு எமது நாட்டில் கல்வியினை கற்கக் கூடிய வசதி வாய்புக்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறைப் பிரதேச செயலக சமூக அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் உயர்தரம் கற்கின்ற மாணவர்களுக்கு வாழ்வின் எழுச்சி 'சிப்தொற' புலமைப்பரிசில் வழங்கல் மற்றும் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு கொடி விற்பனை என்பவற்றில் கூடுதலான பணங்களை சேகரித்த திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கௌரவித்தல் நிகழ்வில் பிரதம அதிதியாக நேற்று (28) கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

வாழ்வின் எழுச்சி பிரதேச உத்தியோகத்தர் எம்.பீ.எம்.ஹூசைன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றுகையில் வறுமை காரணமான மாணவர்கள் கல்வியினை இடைநடுவில் கைவிட்டுவிடக் கூடாது என்ற உன்னத உயரிய நோக்கத்தின் அடிப்படையில் அரசு வருடாந்தம் பல கோடிக்கணக்கான பணங்களை கல்விக்காக செலவு செய்து வருகின்றன.

இலவச பாடசாலைப் புத்தகம், இலவச சீருடை, பாதணிகள், மதிய போசனம், இலவச பால், புலமைப்பரிசில்கள் போன்ற பல்வேறு வசதிகளை செய்து வருகின்றன அதே போன்றுதான் கல்விக்காக சமுர்த்தி அமைச்சின் கீழ் இயங்குகின்ற திவிநெகும திணைக்களத்தின் மூலம் உயர் கல்வியினை தொடருகின்ற திவிநெகும குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு மாதாந்தம் ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கி வருகின்றன.

அந்த அடிப்படையிலேதான் சம்மாந்துறைப் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களாகிய உங்களுக்கு ஒருவருக்கு 16 மாதங்களுக்குரிய 16000 பெறுமதியான காசேலைகள் வழங்கப்பட்டுள்ளது இது வேறு எந்தத் தேவைகளுக்கும் பயன்படுத்துவதற்கல்ல கல்விக்காக மாத்திரம் செலவு செய்யப்பட வேண்டும். இது போன்று இன்னுபல சேவைகளை செய்து வருகின்றன இவ்வாறான வரப்பிரசாதங்கள் கல்வியினை தொடர இருக்கின்ற போது நாம் கல்வியினை எந்தவொரு காரணத்துக்காகவும் இடைவிடமுடியாது.

எமக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வாய்ப்புக்களை பணன்படுத்தி சிறந்த கல்வியை பெற்று எமது தாய்நாட்டுக்கு அற்பணிப்புடன் பணியாற்றக்கூடிய நல்ல கல்விமான்களாக வரவேண்டும்.

அதுமாத்திரமன்றி இன்றைய விஞ்ஞான தகவல் தொழில் நுட்பத்துறைக்கு ஈடுகொடுக்கக் கூடிய கல்விச் சமூகமாக நீங்கள் மாற வேண்டும் கல்வியை விட எமக்கு வேறு எந்தச் சொத்தும் ஈடாகது எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அதிதிகளாக சம்மாந்துறைப் பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், முhமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.ஹமீட், திட்டமுகாமையாளர் யூ.எல்.றஹ்மத்துல்லா, முகாமையாளர்களான ஏ.ஜினேந்திரன்,எஸ்.எல்.எம்.மசூர்,ஐ.எல்.எஸ்.ஹிதாயா, எம்.ஆஷாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ச








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -