யுத்தத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட அழிவுகளின் காரணமாக அதிகமான பெண்கள் பாதிப்புற்றனர். அவர்களின் அடிப்படை வசதிகளும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.
ஜேர்மனில் இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பும் போரின் பின்னரான சுழலில் பெண்களின் பாத்திரம் மற்றும் நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளும் எனும் தலைப்பில் 2ம் திகதி முதல் 10ம் திகதி வரை ஜேர்மன் பேர்லினில்; நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றும் போதே சல்மா மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்;
நகர சபையின் முதலாவது பெண் உறுப்பினராக மக்களினால் தெரிவு செய்யப்பட்டிருந்தேன் . அரசியல் தளம் என்பது சமூகக் கட்டமைப்பிலிருந்து தனித்த ஒன்றாக இருக்க முடியாது. சமுகத்தில் மனிதர்களது ஒருங்கிணைந்த அபிலாசைகளும், தேவைகளும் அவர்களி;ன் இருப்புக்களுக்கான முயற்சிகளும் அரசியல் நடவடிக்கைகளி;ல் உந்து சக்தியாக எனக்கு அமைந்தது.
நகர சபையில் மக்களின் அன்றாடத் தேவைகள் மற்றும் பெண்களி;ன் பிரச்சினைகளை அடையாளங் கண்டு, பாரபட்சம் இன்றி செயலாற்றியுள்ளேன். பெண்களை அடக்கவும், இரண்டாம்பட்ச நிலைக்கு அவர்களை இட்டுச் செல்லவும், அவர்களது தனி;த்துவத்தை இழக்கச் செய்யவும் சுமை தாங்கிகளாகவும், தங்கிவாழ்பவர்களாகவும் பெண்களை மாற்றுகின்ற ஒரு முறைமைதான் பெண்களுக்கெதிராக பயன்படு;த்தப்பட்டு வந்தது. இதனை மாற்றியமைக்க வேண்டுமென்ற எனது பிரச்சாரங்களினால் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
எனது அரசியல் பயணத்தில் இன்னும் பல பெண் அரசியல்வாதிகளின் பிரவேசம் தேவை என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டேன். தேர்தலில் போட்டியிடுவதற்கு பெண்களுக்கு வாய்ப்பளிக்கும்; வீதத்தை மிகச் சொற்பமாகவே அரசியல் கட்சிகள் வழங்கி வருகின்றது.
இது அதிகரிக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். இஸ்லாத்தில் பெண்களின் தலைமைத்துவம்; பற்றிய கருத்துக்கள் என்னை அரசியலில் பிரவேசிக்க உந்துகோளாய் அமைந்தது. வுரலாற்றில் இஸ்லாமியப் பெண்களுக்குள்ள பக்குவமும், அவர்களின் தலைமையில் கிடைத்த நிதானப் போக்கும் சரித்திரங்களைப் படிக்கும் போது வழிகாட்டியாக பாடம்புகட்டித்தருகிறது.
இருப்பினும் ஆண்களுக்கே உரியதாக ஆண்களால் மாற்றப்பட்டுள்ள அரசியல் களத்தில் பெண்களது பிரவேசம் மற்றும் அவர்களது இருப்புத் தொடர்பாக அதிகளவு அக்கறை செலுத்த வேண்டியிருப்பதுடன் அரசியற் களத்தில் பெண் அரசியல்;வாதிகளது வருகையை ஊக்குவி;க்கவேண்டியமை இன்றியமையாததாகின்றது.
ஏனைய நாடுகளை விட இலங்கையில் பெண்களின் கல்வியறிவு வீதம் அதிகமாகும். ஆனால் தீர்மானம் எடுக்கும் இடங்களில் பெண்களின் வகிபங்கு குறைவு.
இலங்கையில் நடந்து முடிந்த யுத்தத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட அழிவுகளின் காரணமாக அதிகமான பெண்கள் பாதிப்புற்றனர். அவர்களின் அடிப்படை வசதிகளும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அரசியலில் உள்ள பெண்கள் அல்லது அரசியலில் இருந்தவர்கள் குடும்ப ஆண்களின் அரசியல் பின்னணியுடன் பின் தொடர்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர். ஒரு பெண் அரசியலுக்கு வருவதாயின் குடும்ப, சமூக, பொருளாதார, அரசியல் தடைகள் ஆண்களை விட அதிகமாகவே காணப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.றி
.jpg)
.jpg)
.jpg)