முல்லைத்தீவு பொலிஸ் பிரிவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான எந்தவொரு நினைவு தினத்தையும் அனுஸ்டிப்பதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இது குறித்து நீதிமன்றத்திற்கு பொலிஸார் அறிவித்த வேளை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 18ம் திகதி முதல் 14 நாட்களுக்கு இவ்வாறு நினைவு தினம் அனுஷ்டிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அ.தெ
