தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவை அம்பாறை மாவட்டத்தில் உதயம்!

எம்.வை.அமீர் - 

துவரையும் அம்பாறை மாவட்டத்தில் பாரிய குறையாக இருந்த தமிழ் எழுத்தாளர்களுக்கான அமைப்பு இல்லையே என்ற குறை 2015-05-16 ல் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நிறைவேறியது.

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவை எனும் பெயரில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்ட மேற்படி பேரவையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் அனைத்து இனங்களையும் பிரதிநிநிதிப்படுத்தக்கூடிய எழுத்தாளர்கள் பங்கு கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வின் பிரதான ஏற்பாட்டாளரான வரலாற்றாசிரியர் தேசமானிய ஜலீல் ஜீ அவர்களின் பாரிய முயற்சியால் ஒன்று சேர்க்கப்பட்ட அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர்களின் ஒன்று கூடலுக்கு பிரதம அதிதியாக, சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் அவர்கள் கலந்து கொண்டார்கள். கௌரவ அதிதியாக சம்மாந்துறை வலைய கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் அவர்களும் சிறப்பு அதிதிகளாக சட்டத்தரணி எம்.ஐ.எம்.றாசிக்,சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஜே.ஜே.தஹன ஆகியோரும் விசேட அதிதிகளாக மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் அவர்களும் மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.பிரதாப் அவர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் ஆரம்பத்தில் அதிதிகள் மற்றும் எழுத்தாளர்களால் அமைதி ஊர்வலம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதுடன் மண்டபம் நிறைந்த எழுத்தாளர்களால் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு எதிர்காலத்தில் இவ் அமைப்பின் ஊடாக இணைந்து செயற்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.றி







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -