இக்பால் அலி-
மஹரகம கபூரிய்யா அரபிக் கல்லூரியின் பழைய மாணவர்களதும் நலன் விரும்பிகளினதும் நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கேற்பவும்; பழைய மாணவர்கள் கல்லூரியுடன் நெருக்கமான தொடர்பை பேணும் வகையிலும் பழைய மாணவர் ஒன்று கூடலும், பழைய மாணவர் சங்க புனரமைப்பும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளதாக கல்லூரியின் உள்விவகார, வெளிவிகார மற்றும் தொடர்பாடல் பொறுப்பாளராகிய அஷ்ஷெய்க் ஜே.எம்.இம்ரான் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இந்நிகழ்வு 06-06-2015 சனிக்கிழமை மு.ப. 9.30 மணி அளவில்; கபூரிய்யா வளாகம், மஹரகம அப்துல் கபூர் ஹாஜியார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒன்று கூடல் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுவதால், பழைய மாணவர்கள் ஒவ்வொருவரினதும் வருகை மிக முக்கியமான ஒன்றாக கருதப்படும். ஒரு வருடத்திற்கு குறையாத காலம் கபூரிய்யாவில் கல்வி பயின்றோரும் பழைய மாணவர்களாகவே கருதப்படுவர்.
மேலதிக தகவல்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கல்லூரியின் உள்விவகார, வெளிவிகார மற்றும் தொடர்பாடல் பொறுப்பாளராகிய அஷ்ஷெய்க் ஜே.எம்.இம்ரான் 0777273177 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளும்படியும்.
இந்தக் கூட்டத்தில் மர்ஹும் என். டி. எச். அப்துல் கபூர் பற்றிய நூல் வெளியீடு தொடர்பாகவுகம் அவரது குடும்பத்தினரை கௌரவிக்கும் வகையிலும் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மஹரகம கபூரிய்யா அரபிக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம்.மஃரூப் (கபூரி எம்.ஏ) மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
