எம்.ஜே.எம்.முஜாஹித்-
முதலுதவி பயிற்சியானது தம்மையும், தம் சமூகத்தையும் இயற்கை அனர்த்தம் மற்றும் பாடசாலைகளில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும்முகமாக இப்பயிற்சியானது வழங்கப்படுகின்றது எனவே மாணவர்களாகிய நீங்கள் இவ்வாறான இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மட்டும் நின்றுவிடாது கல்வியிலும் ஆர்வம் காட்டி சமூகத்தில் ஒரு நல்ல பிரஜையாக வர வேண்டும் என அக்கரைப்பற்று திட்டமிடல் உதவி கல்விப்பணிப்பாளர் ஏ.எல். அஸ்ஹர் தெரிவித்தார்.
முதலுதவியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அல் அறபா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் ஏ.எல்.எம். பாயிஸ் தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது 50 மாணவர்கள் முதலுதவி பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ்கள் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆணையாளர் எம்.எச்.எம். மன்சூர், முதலுதவிகளுக்கு அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திற்கான பிரதேச பொறுப்பாளர் பஸ்மீர் ஆசிரியர், மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் உட்பட மாணவர்களும் கலந்து கொண்டனர்.(ந)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)