அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆப் பள்ளி நிர்வாகிகள் திகாமடுல்ல எம்.பி.யுடன் கலந்துரையாடல்!

திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிமுடன் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் நேற்றுக் காலை அவரது இல்லத்தில் சந்தித்து அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புனர்நிர்மானத்திற்கான தலைமைத்திட்டம் (master plan), அதற்கிசைவான தற்போதைய துரித கட்டமைப்பு வேலைகள் சம்பந்தமான கலந்துரையாடலை மேற்கொண்டனர். 

பள்ளிவாசலின் இடநெருக்கடி, ஹவூழ் புனரமைப்பு, ரமழான்கால பெண்களுக்கான தொழுகையேற்பாடு என பலவிடயங்கள் பேசப்பட்டன. 

இந்த வேலைகள் துரிதமாக ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான வரைபடம், செலவு மதிப்பீடு போன்றனவற்றை சமர்ப்பித்து நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் இப்புனரமைப்பின் அவசியங்களை எடுத்துக்கூறினர். இவற்றை கவனத்துடன் செவிமடுத்த பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைஸல் காசிம் அவர்கள் இப்புனித, துரித வேலைக்கான செலவு மதிப்பீட்டுத் தொகையான 02மில்லியன் ரூபாவினையும் பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக மனமுவந்து ஏற்றுக்கொண்டார்.

பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும் கிழக்கு முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான எஸ்.எல்.எம்.பழீல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பெரிய பள்ளிவாசலின் செயலாளர் ஏ.எல்.எம்.பாறூக் மாஷ்டர், நிர்வாகசபை உறுப்பினர்களான .றஜீஸ், ஏ.சி.அஷ்ரப், மற்றும் பிரதேச சபை உறுப்பினர் எ.எம். முனாப், அலுவலகப் பொறுப்பாளர் ஹமீட் ஜி.எஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.(ந)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -