20 ஆவது அரசியலமைப்பு சட்டமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய தேர்தல் முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தொகுதிவாரியாக 196 உறுப்பினர்களும், 37 பேர் தேசிய பட்டியல் மூலமும், 22 பேர் மாவட்ட விகிதாசார ரீதியிலும் தெரிவு செய்யப்படுவர்.மாவட்ட மட்டத்தில் தொகுதிகளை நிர்ணயம் செய்வதற்கு தொகுதி நிர்ணய ஆணைக்குழு அமைக்கப்படும். சிறுபான்மை அங்கத்துவத்தை உறுதி செய்வதற்காக 10-15 தொகுதிகள் உருவாக்கப்படும்.
05 சதவீத வாக்குகள் பெறும் சகல கட்சிகளுக்கும் உறுப்புரிமை நிர்ணயிக்கப்படும்.
இம்முறையில் விருப்பு வாக்குமுறை முற்றாக இல்லாமலொழிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.(ந)
.jpg)