சாய்ந்தமருது தோணா 3 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது -ரவூப் ஹக்கீம்!

ஹாசிப் யாஸீன்-
சாய்ந்தமருது தோணா 3 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.எச்.எம்.சல்மான், அதன் செயற்பாட்டுப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வேலைத்திட்டத்தின் முதற்கட்ட அபிவிருத்தி வேலைகள் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.(ந)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -