சதொச ஊழல் மோசடி;ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவும், சஜின் வாஸ் குணவர்தனவும் அடுத்த வாரம் கைது!

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவும், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவும் அடுத்த வாரத்தில் கைது செய்யப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக ஜொன்ஸ்டனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பணம் திருப்பி செலுத்தும் அடிப்படையின் கீழ் சதொச நிறுவனத்தில் ஐந்து மில்லியன் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு முன்னாள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் இணைப்புச் செயலாளர் டீ.எம்.ஏ.சகீர் ஏற்கனவே கைது செய்யப்ட்டுள்ளார்.

இதேவேளை சஜின்வாஸ் குணவர்தன பொதுமக்கள் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுவரை மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகியுள்ளதாகவும் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன்.ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -