மக்களின் கோரிக்கைக்கே முன்னுரிமை- முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்!

கிழக்கு மாகாண முதலமைச்சர் பொதுமக்களின் தொலைபேசிக்குப் பதில் தருவதில்லை என்று இன்று பல இணையத்தளங்களில் செய்திகள் வந்துள்ளமை தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் வழங்கிய ஊடக அறிக்கை வருமாறு:

கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் தான் பெற்றிருக்கும் பதவி மூலம் கிழக்கில் உள்ள ஒவ்வொரு பொதுமகனும் தனது குறைகளை நேரடியாக என்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். பொதுமக்கள் விடையத்தில் கவனம் அதிகம் செலுத்தியுள்ள காரணத்தினால் கிழக்கில் சகல பாகத்துக்கும் ஆட்களை நியமித்து அவர்கள் மூலம் கிழக்கில் ஒவ்வொரு மூலை முடுக்குகளில் இருக்கும் மக்களுடைய குறைகளையும் கேட்டு அதற்க்கான தீர்வுகளை வழங்குவதற்கு நிருவாகத்தையும் பணித்திருக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் ஒருவர் குறை சொல்வதற்கு இருந்தால் எனது முகநூல் பக்கம் 24 மணி நேரமும் திறந்தே இருக்கிறது. 
( https://www.facebook.com/pages/Nazeer-Ahamed-CM/423959844449548?fref=ts ) அங்கு வந்து முறையிடலாம் நேரடியாக அதற்கு பதில் சொல்லவும் ஆயத்தமாக இருக்கிறேன். 

மக்களின் குறைகளைக் கேட்டறிதல் மற்றும் இதர சேவைக்காக பணிக்கப்பட்டவர்கள் உங்கள் அழைப்பை புறக்கணித்தால் முகநூல் பக்கம் முறையிடலாம் சகல முறையிலும் மக்களின் குறைகளைக் கேட்டறிய பலவழிகளை மேற்கொண்டுள்ளேன்.

கிழக்கில் இருக்கும் வருமானம் குறைந்த பெண்கள் யாரும் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லக் கூடாது என்பதனை 100வீதம் நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் நிலையங்களை நிறுவி வருகிறேன்.

கடந்த 28ஆம் திகதி ஏறாவூரில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஆடைத்தொழிற்சாலையின் பயிற்சி நிலையமாக ஆரம்பித்து வைத்துள்ளேன். இதன் மூலம் 1000க்கு மேற்பட்ட யுவதிகளுக்கு தொழில் வழங்கப்பட இருக்கிறது.

இது போன்று அம்பாரை, திருகோணமலை, மாவட்டங்களில் பலபகுதிகளிலும் காணிகளை இனங்கண்டு வருகிறோம் அதற்கான வேலைகள் விரைவில் இவ்வருடம் முடியும் முன்னரே செய்து முடிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

படிப்பை இடையில் நிறுத்தி வேலையற்று இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு வருமான மீட்டும் வகையில் தொழில் வழங்க ஆயத்தமாக இருக்கிறேன். இதற்காக மாகாண சபை ஏனைய அமைச்சர்களும், உறுப்பினர்களும் என்னுடன் பக்கபலமாக இருப்பது எமக்கு பெரும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் எனது முதலமைச்சு ஆட்சிக்காலத்திற்குள் 20 ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்க தீர்மாணித்து அந்த முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.

எனது இந்த முயற்சி வெற்றியளிக்க என்னுடன் அனைவரும் கைகோர்த்து உதவ வேண்டும் என்று அனைவருக்கும் அன்பான அழைப்பும் விடுக்கின்றேன். 

முக்கிய வேலைப்பழுக்களில் எனது தொலைபேசி உங்களுக்குப் பதில் தரவில்லை என்றால் உடனே மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க நியமிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

அந்த வகையில் திருகோணமலையில் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள்:

திருகோணமலை காரியாலயம்- 026 222 6055
முதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் 
கே.பத்மநாதன் -077 381 6364
முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர்
எஸ்.எம்.எஸ்.எம்.சரூஜ்- 077 105 1075

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள்:

ஏறாவூர் காரியாலயம்- 065 224 1051
முதலமைச்சரின் ஏறாவூருக்கான இணைப்பாளர்
நாஸர் மாஸ்டர் -077 9638 663
முதலமைச்சரின் ஊடகப்பிரிவு
ஏ.ஜெயராஜ்- 077 355 7675


அம்பாரை மாவட்டத்தில் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள்:

முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர்:
எஸ்.எல்.எம்.பழீல் பி.ஏ. -077 4237 236
முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர்: 
எஸ்.எல்.முனாஸ் -077 127 6680

கொழும்புக் காரியாலயம்- 011 2300488
முதலமைச்சரின் ஊடகப்பிரிவு
ஏ.எம்.மஹ்சூம் -077 0125 299

இவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். முதலமைச்சரின் முகநூல் பக்கம் (Nazeer Ahamed CM) சென்று நேரடியான கருத்துக்களை அனுப்பி வைக்கலாம் பரிசீலனை செய்யப்படும்.என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -