நாடாளுமன்றத்தை எதிர்வரும் ஜூன் மாதம் கலைக்க திட்டம்!

நாடாளுமன்றத்தை எதிர்வரும் ஜூன் மாதம் இரண்டாம் வாரம் கலைத்து, ஆகஸ்ட் 27ம் திகதி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்திற்கு முன்னர் புதிய அரசாங்கத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் ஆகஸ்ட் இறுதி வாரத்தில் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை துரிதமாக தீர்க்க முடியாது போனால், அந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றாது தேர்தலுக்கு செல்ல வேண்டும் என சில அரசியல் கட்சிகள் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.sa
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -