இக்பால் அலி-
இலங்கையிலுள்ள சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பினால் நேபாளம் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நடவடிக்கையை மேற்கொள்வதற்காக விடுத்த கோரிக்கையினை அடுத்து ஒரு கோடி 35 ரூபா நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளதாக இலங்கைக்கான சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான வதியிடப்பிரதிநிதி கலாநிதி அஷ்ஷெய்க் முஹமட் பா ஜுனைட் மற்றும் இவ்வமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அஷ்ஷெய்க் ஜே. எம். இம்ரான் ஆகியோர்கள் தெரிவித்துள்ளனர்.
நேபாளம் நாட்டிலுள்ள சவூதி அரேபியா தூதுவலராயத்தின் ஊடாக இந்த நிதி மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக வழங்கப்படவுள்ளது. இந்த நிதி மருத்துவ முதலுதவி, முன் அவசர மீள் கட்டமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். றி
