விபத்து - சிறுமி பலி, 13 பேர் காயம்!

ம்புத்தேகம - கோன்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். 

வாரியப்பொல பகுதியில் இருந்து அனுராதபுரம் பிரதேசத்திற்கு சென்ற சிறிய ட்ரக் வண்டி ஒன்று, வேகத்தை கட்டுப்படுத்த முடியாது வீதியைவிட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் சம்பவத்தில் எட்டு வயது சிறுமி ஒருவரே பலியாகியுள்ளார். 

விபத்தில் காயமடைந்த 13 பேரும் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, அவற்றில் இரு பெண்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -