அம்பாறை மாவட்டத்தில் மூவினங்களையும்சேர்ந்த1200 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன் வழங்கும் திட்டம்!

அஸ்ரப் ஏ . சமத்-

ம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில் நாளை மூவினங்களையும் சேர்ந்த 1200 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன் வழங்கும் திட்டம் சனிக்கிமை வழங்கி வைக்கப்படும். 

வீடமைப்பு சமுர்த்தி அமைச்சினால் நாடு முழுவதிலும் 50ஆயிரம வீடுகள் நிர்மாணிக்கவென 1 இலட்சம் ருபா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் இந் நிகழ்வு நடைபெறவுள்ளது. 

இந் நிகழ்வு அம்பாறை நகர மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (30)ஆம்திக காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 

இந் நிகழ்வின்போது 30 குடும்பங்களுக்க வீட்டுரிமைப்பத்திரமும் வழங்கப்படும். இந் நிகழ்வில் வீடமைப்பு சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ். அமீர் அலியும் 

அம்பாறை மாவட்ட அரசியல் பிரநிதிகளும் கலந்து கொள்வார்கள். அதே தினம் பிற்பகல் 4.00 மணிக்கு மொணராகலை மாவட்டத்தில் 850 குடும்பங்களுக்கும் அமைச்சர் சஜித்தினால் வீட்டுக்கடன்கள் வழங்கி வைக்கப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -