அம்பாரை மாவட்டக் கரும்புக்காணி செய்கையாளர்களின் பிரச்சினை சம்பந்தமான உயர்மட்ட கலந்துரையாடல்!

ம்பாரை மாவட்ட கரும்புக்காணி செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலொன்று பாராளுமன்றக் கட்டிடத்தில் சி.ல.மு.காங்கிரஸ் தேசியத்தலைவரும் மாண்புமிகு நீர்வழங்கல் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரஊப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இந்த கலந்துரையாடலில் செயலாளர் நாயகமும் சுகாதார இராஜாங்க அமைச்சருமான கௌரவ.ஹசன் அலி, தோட்டக்கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ.எஸ்.வேலாயுதம், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.பைசல் காசிம், சி.ல.மு.காங்கிரஸ் உச்சபீட உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ஜனாப்.எஸ்.எல்.எம்.பளீல், உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி முஸ்தபா ஆகியோர் கலந்துகொண்டனர். 

தங்களது பிரச்சினைகளை நேரடியாக எடுத்துரைக்கும் நோக்குடன் ஆலங்குளம் விவசாயப் பயிர்ச்செய்கை சங்கம், தீகவாப்பி விவசாயப் பயிர்ச்செய்கை சங்கம், நுரைச்சோலை விவசாயிகள சங்கம், கள்ளியன்பத்தை மோறவிலாறு விவசாயப் பயிர்ச்செய்கை சங்கம் ஆகியவற்றின் மூவினத்தையும் உள்ளடக்கிய 30க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தமது மொழியில் அமைச்சர்களுக்கு எடுத்துக்கூறினர்.இச்சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகளின் சுமார் 2500 ஏக்கர் காணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

தம்மால் தமது முன்னோர்களால் 1952ம் ஆண்டு காலப்பகுதியில் காடுவெட்டி களனிகளாக்கி விவசாயத்திற்கு உட்படுத்தப்பட்டுவந்த மேற்படி காணிகள் 1967ம்ஆண்டு காலப்பகுதியில் கல்லோயா அபிவிருத்திக் குழவினால் கரும்புச்செய்கை பண்ணுவதற்காக நிபந்தனைகளின் பேரில் பெற்றுக்கொள்ளப்பட்டது. 

30வருடங்களின் பின்பு மீண்டும் அவற்றை எம்மிடம் ஒப்படைப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஆயினும் நிபந்தனைகள் எதனையும் நிறைவேற்றாது கரும்புச்செய்கை, கைத்தொழிலினையும் முறையாக செய்யாது எங்களது காணிகளை நெற்செய்கைக்கும் உட்படுத்தவிடாது எமது வாழ்வாதாரத்தை சீரழித்து வருவதாக விவசாயிகள் எடுத்துக்கூறினர்.

குறிப்பாக ஆலங்குளம் விவசாயிகள் தமது 325ஏக்கர் காணிகளை 1990ம் ஆண்டுமுதல் நெற்சாகுபடிக்கு உட்படுத்தி வருவதாகவும், கரும்புச்செய்கைக்கு பொருத்தமற்றவை என அவற்றை மண்ஆய்வுகள் வெளிப்படுத்தியும் கூட எமது காணிகளில் எம்மை விவசாயம் செய்யவிடாது கல்லோயாப் பயிர்ச்செய்கை கூட்டுத்தாபனமும், மாவட்ட அரசஅதிபரும் தனியார்துறை கரும்புச்சாகுபடி முதலாளிகளுக்காக எம்மைப் பலவந்தத்தின் பேரில் கரும்பு செய்யுமாறு கோருவது எமது அடிப்படை உரிமையினை மீறும் செயலெனவும் ஆலங்குளம் விவசாயத்தலைவர்கள் அமைச்சர்களிடம் எடுத்துக்கூறினர்.

நுறைச்சோலைப் பகுதியில் ஒன்ரறை வருடங்கள் காலமெடுக்கும் தற்போது மேற்கொள்ளப்படும்; கரும்புச்செய்கையின் மூலம் 1கண்டத்திற்கு ரூ.45,000ஃ-க்கு மேல் நட்டமடையவேண்டி உள்ளதாகவும் ஆனால் அதேகாலப்பகுதிக்குள் எமதுகாணியை நெற்செய்கைக்கு உட்படுத்துவதன் மூலம் 2போகத்திற்கும் குறைந்தது ரூ.4 இலட்சம் இலாபமீட்ட முடியுமெனவும் ஆதாரபூர்வமாக சங்கத்தலைவர்கள் எடுத்துக் கூறினர்.

விடயங்களை அவதானத்துடன் கேட்டறிந்த விடயதான அமைச்சர் திரு.வேலாயுதம் அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை வழங்கினார்.அத்துடன் ஒருவாரத்தினுள் இந்த விபரங்களடங்கிய முழமையான அறிக்கையொன்றினை கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜனாப்.எஸ்.எல்.எம்.பளீல் அமைச்சர்களிடம் தேவையான நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்க வேண்டுமெனவும் கலந்துரையாடலின் இறுதியில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -