சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு வேஷ்டி வழங்கிவைத்தார் வடக்கு மாகாண அமைச்சர்!






பாறுக் ஷிஹான்-

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு வேஷ்டி வழங்கிவைத்தார் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்.

பிறக்கவிருக்கும் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் இந்துக்களுக்கு 12-04-2015 ஞாயிறு திருக்கேதீஸ்வரம், செல்வநகர், தோட்டக்காடுகிராம மக்கள் அனைவருக்கும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது சித்திரைப் புத்தாண்டுசிறப்பு பரிசாக வேஷ்டி சால்வைகள் வழங்கியதோடு, வடக்கு மாகாணத்திலும் இலங்கையின் அனைத்து பாகங்களிலும், புலம்பெயர்நாடுகளிலும் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் பிறக்கின்ற மன்மத ஆண்டு சீரும் சிறப்புமாக அமையஇறைவனை பிரார்த்தித்து தனது உள்ளத்திலிருந்து விசேட அன்பு நிறைந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்து நிற்பதாகவும் தெரிவித்தார்.

நிகழ்வில் திருக்கேதீஸ்வர கண்ணன் குருக்கள் அவர்களும், புலவர் ஐயா அவர்களும் கலந்து மக்களுக்கு ஆசியுரையும் வழங்கினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -