சம்மாந்துறை அன்சார்-
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள் அப்படி நாம் நோயற்ற வாழ்வு வாழ வேண்டுமாக இருந்தால் எமது ஆரோக்கியத்தில் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.
அண்மைக்காலமாக நமது ஊர்களில் நடமாடும் வியாபாரிகளின் நடமாற்றம் அதிகமாகவே உள்ளது கடலை வியாபாரி, பேக்கரி திண் பண்ட வியாபாரி, ஐஸ்கிறீம் வியாபாரி, அவித்த கடலை வியாபாரி, வறுத்த கடலை வியாபாரி, கருவாட்டு வியாபாரி, தேன் வியாபாரி, மாம்பழ வியாபாரி, சவர்கார வியாபாரி மற்றும் வாழைப்பழ வியாபாரி என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இவர்கள் “மலிவு மலிவு கிலோப் பத்து ரூபா“ என்று கூவித்திரிந்து விற்றுக் கொண்டிருப்பார்கள் மலிவு மலிவு என்ற வார்த்தையை கேட்கும் நம் பெண்கள் “ கொண்டாங்க“ என்று அவர்களை அழைத்து கிலோ பத்து ரூபாத்தானே என்று ஏகப்பட்ட கிலோக்களை வாங்குவார்கள் ஆனால் அந்தப் பொருள் சிறந்த ஆரோக்கியமான பொருளா..?? சுகாதாரத் தன்மையானதா..?? என்று அவர்கள் கொஞ்சமும் சிந்திப்பதில்லை, மலிவாக கிடைக்கின்றதுதானே என்று அதனை வாங்குகின்றார்கள்.
சில சவர்கார வியாபாரிகள் 50 ரூபாவுக்கு 5 கட்டி சவர்காரம் அல்லது பத்துக் கட்டி சவர்க்காரம் என்றும் கூவித்திரிவார்கள் இவர்கள் விற்பனை செய்யும் சவர்காரம் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது..??? இது உடல் ஆரோக்கியத்தோடு ஒத்துப் போகும் விதம் தயாரிக்கப்படுகின்றதா..??? எவ்வகையான மூலப் பொருட்களைக் கொண்டு இவைகள் தயாரிக்கப்படுகின்றன என்ற எந்தவொரு சிந்தனையும் இல்லாமல் நம் பெண்கள் இதனை வாங்கி பிறகு ஒவ்வாமையால் அவதிப்படுகின்றார்கள்.
ஊர் பேர் தெரியாத, முகவரிகள் தெரியாத, அவர்களது தயாரிப்புக் கொம்பனிகள் பற்றித் தெரியாமல் நாம் அவர்களது திண்பண்டங்களையோ அல்லது எப்பண்டங்களையோ வாங்கி அதனை உபயோகித்து அதன் பிறகு நோய் நொடிகளை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றோம் இப்படி எதுவும் தெரியாமல் பிறகு அவர்களை எங்கணம் கண்டு பிடித்து நடவடிக்கை எடுப்பது..???? ஆகவே இவ்வாறான வியாரிகளிடமிருந்து பொருட்களை வாங்கும் போது அவர்களது பொருட்கள் விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் அல்லது வாங்குவதை தவிர்த்து விட வேண்டும்.
சுகாதார விடயத்தில் உங்களுக்கு சந்தேகமான பொருட்களையோ, மலிவு மலிவு என்று கூவி விற்கும் பொருட்களையோ நீங்கள் வாங்கும் போது அதன் சுகாதாரத்தன்மையை அறிந்து வாங்குங்கள் அல்லது முற்றாக தவிர்த்து விடுங்கள்.
அண்மைக்காலமாக நமது ஊர்களில் இவ்வாறான உள்ளுர் மற்றும் வெளியூர் வியாரிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாகவும், அவர்களின் பொருட்களின் சுகாதாரத்தரம் ஆரோக்கியமானதாக இல்லை என்றும் கூறப்படுகின்றது. ஆகவே மக்கள் மிக அவதானமாகவும், விழிப்பாகவும் இது விடயத்தில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும் ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள சுகாதார பரிசோதகர்ககளும், சம்பந்தப்பட்ட அரசியல் மற்றும் அரசியல்சாரா உத்தியோகத்தர்களும் இவ்வாறான வியாபாரிகள் விடயத்திலும், அவர்களது பொருட்களின் விடயத்திலும் காத்திரமான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்பதையும் வேண்டிக் கொள்கின்றேன்.
%2Bcopy.jpg)