இக்பால் அலி-
இந்தியா ராமநாதபுரத்தில் 100 படுக்கைகளுடன் கூடிய ஆசி பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இலங்கை அக்குரணையைச் சேர்ந்த சியாம்டீன் பவுண்டேஷன் அமைப்பின் தலைவரும் யப்பான் நாட்டில் வதிவிடமாகக் கொண்டு வாகன வர்த்தகதுறையில் ஈடுபடும் தொழிலதிபர் கலாநிதி எஸ். எச். எம் சியாம்டீனுக்கு பொன்னாடை போர்த்தி மலர்ச் செண்டு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதில் இந்தியா திரைப்பட இயக்குநர் கே. எஸ் ரவிக்குமார் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், வைத்தியதிகாரி எஸ். சுந்தரராஜன் மலர்ச் செண்டு வழங்கி கௌரவித்தனர்.இந்நிகழ்வில் ராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, அமைச்சர் சுந்தரராஜ், கீழக்கரை செய்யது அப்துல் காதர். சட்ட மன்ற உறுப்பினர்கள். இசையமைப்பாளர்கள்
திரைப்பட நடிகர்கள் பலர் கலந்து சிறந்தனர்.

.jpg)