சந்திரிக்காவை பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறக்க நடவடிக்கை!


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள், ஆலோசனை வழங்கத் தயாராகவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக சந்திரிக்கா தெரிவித்து வந்தாலும், பதவியை கொடுத்தால் ஏற்கத் தயார் என்ற நிலையிலும் உள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும், பொது வேட்பாளரை தெரிவுசெய்வதில் சிக்கல் நிலை காணப்பட்டபோது அவ்வப்போது சந்திரிக்காவின் பெயரும் அடிபட்டது. அப்போது, மக்கள் விரும்பினால் தான் பொதுவேட்பாளராக போட்டியிட தயாரென்ற கருத்தையும் சந்திரிக்கா வெளியிட்டிருந்தார்.

மறுபக்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கும் முயற்சிகளும், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.- 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -