இலங்கை ஆசிர்வாதம் (Bless Srilanka ) கிறிஸ்தவ அமைப்பு ஏற்பாடு செய்த மாபெரும் பஸ்கா பண்டிகை நிகழ்வு 04-04-2015 நேற்று சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் தயாகமகே உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட அரச அதிகாரிகள் ,பெரும் திரளான கிறிஸ்தவ மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.