19ம் திருத்தச் சட்டம் குறித்த உச்சநீதிமன்றின் சட்ட விளக்கம் எதிர்வரும் 7ம் அல்லது 8ம் திகதி நாடாளுமன்றிற்கு அறிவிக்கப்படவுள்ளது. சபாநாயகர் சமல் ராஜபக்ஸவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது. 19ம் திருத்தச் சட்டம் குறித்த நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் 8, 9 மற்றும் 10ம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். இதேவேளை, 19ம் திருத்தச் சட்ட அமுலாக்கத்திற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
